பட்டிவீரன்பட்டியில் அரசு டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்கப்படும் அனைத்து ரகங்களுக்கும் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ 10 முதல் ரூ 30 வரையிலும், ஃபுல் பாட்டிலுக்கு ரூ 40 முதல் ரூ 80 வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மது கடைக்கு வந்த திமுக பிரமுகர் முருகேசன் என்பவர் குவார்ட்டர் பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா பணம் கேட்டதால் இவருக்கும், டாஸ்மாக் பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது