சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் பிரமாண்டமாக நடைபெற்றது. சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளி யானை வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி, கஜமுகனுடன் போரிட்டு, தந்தத்தால் வதம் செய்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். பெண்கள் பூக்கோலமிட்டு, விநாயக புராணம் வாசிக்கப்பட்டது.