ஓசூரில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலதில் தொடர்ந்து பழுது நீக்கும் பணிகள். மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில், தூண்களின் மீது உள்ள சாலை பீம்கள் இணைப்பிலிருந்து விலகி பழுதாகின.