ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேல் அசநெல்லி குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவேலு கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் தொடர்ந்து முகாமில் பங்கேற்க வந்த பொதுமக்களுக்கு திமுக நிர்வாகிகள் மனு எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் நல திட்ட உதவிகளை வழங்கினார்