சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதூரைச் சேர்ந்த முகமது சியாத் என்பவருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது இளைய மகன் தாகித், திருப்புவனத்தில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இன்று, வழக்கம்போல் தனது நண்பர்களுடன் அருகிலுள்ள வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற தாகித், விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதியில் சென்று மூழ்கிப் பலியானார்.