அரியலூர் தேவமங்கலம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர் இரு சக்கர வாகனத்தில் பட்டினம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறு கீழே விழுந்து தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.