திருவள்ளூரில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து டீ 19 என்ற அரசு பேருந்து தக்கோலம் நோக்கி புறப்பட்டது. கிட்டத்தட்ட 20 பயணிகளுடன் புறப்பட்ட இந்த பேருந்து 10 கிலோமீட்டர் தூரம் உள்ள கடம்பத்தூர் மேம்பாலத்தின் மீது ஏறி இறங்கியதும் டயர் பஞ்சர் ஆகி பாதி வழியில் திடீரென நின்றது. இதனால் இதில் பயணித்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.