அவினாசி பாலமானது 17.25 மீட்டர் அகலம் கொண்டது. சுமார் 305 பில்லர்களுடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஹோப் கல்லூரி, நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம், ரெசிடென்சி ஓட்டல் ஆகிய இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.