கட்டேரி பகுதியில் திருவிழாவை முன்னிட்டு டிஎஸ்பி சௌமியா தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக இரு வாலிபர்கள் வந்துள்ளார் .அவரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, ரவி உள்ளிட்ட இருவரும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஊத்தங்கரை, குப்பம் ஆகிய பகுதிகளில் தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர் மேலும் இருவரையும் கைது செய்தனர்.