சென்னை ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 13 வது கட்டமாக இறப்பு இடமாற்றம் இரட்டை பதிவு ஆகியவற்றை முறையாக நீக்கப்படாததால் அதிமுக சார்பில் கள ஆய்வு செய்து சரி பார்த்த வாக்காளர் பட்டியலை 4வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் ராஜ்குமாரிடம் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் நித்தியானந்தம், செந்தில்குமார் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.