ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தா.இருசக்கர வாகனத்தில் வந்த விவேகானந்தாவிடம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் தங்களை இறக்கி விடுமாறு தினேஷ் மற்றும் கார்த்தி ஆகிய இருவர் லிப்ட் கேட்டுள்ளனர். தாஜ்புரா அருகே வந்தபோது விவேகானந்தாவை தாக்கிய இருவரும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தினேஷ் மற்றும் கார்த்தி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்