விருதுநகர் மாவட்டம், பரளச்சி பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கடலாடி அடுத்த கருங்குளம் பகுதியில் ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஆம்னி வேனில் பூப்பாண்டியபுரம் அருகே வந்தபோது, ஆம்னி வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் பலமுறை பல்டி அடித்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.