திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மாவட்ட திமுக சார்பில் அண்ணா அறிவகம் என்கிற வார் ரூம் திறப்பு விழா இன்று மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு வார் ரூமை திறந்து வைத்தார்.