திருப்பத்தூர் கீழரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் 25 ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் இன்று பூமாயி அம்மன் கோயில் முன்பு அமைந்துள்ள ஸ்ரீசுந்தர மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம், அலகு குத்தி, பூமாயி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் பால்குடம் சுமந்து நடந்து வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் மஞ்சள் வேப்பிலை கலந்த நீரை ஊற்றி வழிபட்டனர்.