விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு வட்டாட்சியர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவினை வழங்கினார். அப்போது மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன் ஒன்றிய குழு துணை தலைவர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.