நெல்லை சிஎஸ்ஐ டயோசீசன் கீழ் இயங்கும் சாரா டக்கர் மகளிர் கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை11 மணி அளவில் அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்பொழுது சக பணியாளர் ஒருவர் போராட்டத்தை இழிவுபடுத்தியதால் பெண் பணியாளர் ஒருவர் செருப்பைக் கொண்டு தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.