வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 29ஆம் தேதி சமீம் பீ என்ற பெண் நோயாளி சிகிச்சைக்காக சென்றபோது ரத்த கொதிப்பு மாத்திரைக்கு பதிலாக இருதய நோய்க்கான மாத்திரை கொடுத்ததால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இன்று மாலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சமீம் பீ என்பவர் பேட்டி அளித்துள்ளார்.