திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரசார் மாபெரும் கண்டன பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பாலஸ்தீன இஸ்ரேல் மோதலை நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீன காசாவில் மக்கள் இன படுகொலை செய்வதை கண்டித்தும், உலக நாடுகள் அனைத்தும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் பேரணியில் ஈடுபட்டனர்.