அரியலூர் மாவட்டம் கள்ளூர் பாலத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தகுந்த மருத்துவ சான்றிதழ் மற்றும் அரசு அனுமதி பெறாமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து பன்னீர்செல்வம் வீட்டை சோதனை செய்தனர். மேலும் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து மருத்துவம் பார்த்து வந்த பன்னீர்செல்வத்தை கைது செய்துள்ளனர்.