அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் அபராத வரி விதிப்பை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால் திருப்பூர் ஆயத்த பின்னலாடைத்துறை பெரும் பாதிப்பை சந்திக்கக்கூடிய நிலையில் இதுகுறித்து தீவிர நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் எம்.பி சுப்பராயன் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.