திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த ரசாயன வியாபாரியான ஹேமந்த்குமார் ஜெயின் (59) என்பவர் விளாங்காடுபாக்கம் பகுதியில் உள்ள 67.5 சென்ட் நிலத்தை 1.1 கோடி ரூபாய் பணம் செலுத்தி கடந்த 2022ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார்.ஆள் மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு நடந்திருப்பதை கண்டறிந்த அவர் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அவர் புகாரின் அடிப்படையில் மோசடி செய்த நெல்லையை சேர்ந்த இளையராஜா 49, திருமுல்லைவாயல் சேர்ந்த ஆனந்தகுமார் 35 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்,