அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார், இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது எந்த சேதாரமும் இல்லை, எங்கள் கூட்டணியில் பிரச்சனையும் இல்லை, தேர்தல் கருத்துக் கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், தேமுதிக, பாமக தற்போது யாரிடம் உள்ளார்கள். பாஜக கூட்டணி தான் சிதறிப் போய் உள்ளது என செல்வப் பெருந்தகை பேசினார்.