அரவக்குறிச்சி அருகே சீரா கவுண்டனூரைச் சேர்ந்த ரவி செல்வநாயகி இளைய மகள் ஓவியா இன்று அவரது குடும்பத்தினர் ஒப்புதல் உடன் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது இதில் கண்கள் சிறுகுடல் பெருங்குடல் கல்லீரல் சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டு அவரது உடலை அவரது சொந்த ஊரில் அவரது இல்லத்தில் வைத்தனர் . சிறுமியின் உடலுக்கு அரசு சார்பில் அரவக்குறிச்சி வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .