நாட்றம்பள்ளி அடுத்த பண்ணான்டகுப்பம் கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.