திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த மப்பேடு பகுதியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது,இந்த வங்கியில் மப்பேடு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 100 மேற்பட்ட கிராம மக்கள் வங்கி கணக்கு தொடங்கியும் அதில் பணத்தை சேமித்தும் ,நகை கடன் பெற்றும் அதேபோன்று மகளிர் சுய உதவி குழுவினர் கடன் பெற்று பல ஆண்டுகளாக பயனடைந்து வருகின்றனர், அத்தகைய வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி மேல் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்