டெல்டா பாசனத்திற்காக ஜூன்.12 மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் காவிரி நீர் கல்லணை வழியாக தற்பொழுது காவிரி கடைமடையான நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ஏர்வைக்காடு கதவணை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததை தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ். ஸ்ரீதர் தலைமையிலான விவசாயிகள் நெல்மணிகள் மற்றும் மலர் தூவி உற்சா