ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிக்குமாருக்கு வந்த தகவலடுத்து மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பேருந்தில் வந்த 2 பேரிடம் வைத்திருந்த 2 பைகளை சோதனைநாட்டு போது அதில் கஞ்சா இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரை சிறையில் அடைத்தனர்