திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட சிங்கித்துறை பகுதியில் அமைந்துள்ள தூய செல்வ மாதா கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தூய செல்வ மாதாவை அலங்கரித்து தேரில் வைத்து சிங்கித்துறை முழுவதும் வீதி உலா நடைபெற்றது. புனித வின்செட் தே பவுல் சபை, அருட்பணி அலாய்சியஸ், வீரபாண்டியபட்டினம் மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்