கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக் காடு சூழல் சுற்றுலாவில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர் பில்லூர் அணையில் படகு சவாரி மற்றும் மலைவாழ் மக்களின் உணவு என மிகுந்த உற்சாகத்துடன் அவர்கள் பொழுதை கழித்தனர் இந்த நிலையில் இன்று முதல் மலைவாழ் மக்களின் இசை நடன நிகழ்ச்சியும் இனைக்கபட்டுள்ள நிலையில் அவர்களுடன் சுற்றுலா பயணிகள் இனைந்து நடனம் ஆடினர்