சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் 11KV மேலப்பட்டி பீடரில் மரம், மரக்கிளைகளை அகற்றும் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், இன்று (சனிக்கிழமை) காலை 10 முதல் மாலை 3 மணி வரை தண்ணீர் பந்தல், அணைக்கரைப்பட்டி, கிருங்காகோட்டை, மேலப்பட்டி, முட்டாகட்டி, ஓடுவன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி அறிவித்துள்ளார்.