தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் ரூ.8.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றினார்