ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்போது ரயில்வே தண்டவாளத்தில் 4அடி அளவிலான இரண்டரை கிலோ மண்ணுளிப் பாம்பு தென்பட்டது. அதனை துணை காவல் ஆய்வாளர் டீஜீத் மற்றும் காவலர் சக்திவேல் அதனைப் பிடித்து வனத்துறையினரிடம் தகவல் கொடுத்ததன் பேரில் வனக்காப்பாளர் நவாஸ் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் வந்து மண்ணுளிப் பாம்பை பெற்று சென்றனர்.