கும்பகோணத்தில் இருந்து இன்று கிளம்பிய அரசு பேருந்து காரைக்குறிச்சி, அருள்மொழி வழியாக அரியலூர் சென்றது. இந்த பேருந்தை பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிவக்குமார் மற்றும் 5 பயணிகள் சென்றுள்ளனர். அப்போது அருள்மொழி கிராம வயல்வெளி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறங்கியது. ஆனால் நூலிழையில் மின்கம்பத்தில் மோதாமல் இருந்ததால் பயணிகள் உயிர் தப்பினர்.