திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.