சிவகங்கை வடக்கு ராஜவீதியைச் சேர்ந்த மாரியப்பன் (67) சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் உழவர் சந்தை அருகில் உள்ளது. மாரியப்பன் தொழிலாளர்களுடன் குடோனுக்கு சென்றபோது, கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, முன்னாள் தொழிலாளி குமார் (52) குடோனில் இருந்த 20 சிமெண்ட் மூட்டைகளை தனது மினி லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, மாரியப்பன் குமாரையும், லாரியையும் பிடித்து சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைத்தார்.