திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு சரவணா தெரு ஊரல் பட்டி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் காட்டு மாடு நடமாட்டம் இருந்தது. தொடர்ந்து அப்பகுதியில் காட்டு மாடுகள் சர்வ சாதாரணமாக மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதும் செல்வதும் சாதாரணமாக ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து காட்டு மாடினால் காட்டுப்பகுதியில் வேலை செய்யும் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது.