காரடர்ந்தகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடத்த வாரம் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வந்து கும்பம் மற்றும் சுவாமி மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது