ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவரக்கரை பகுதியில் நேற்று இரவு இளம் பெண் ஒருவர் 3 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று மூவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.