திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு பகுதியில் புதிய சாக்கடை கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நிகழ்ச்சி அப்பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வார்டின் முக்கிய பகுதி வழியாக செல்லும் சாக்கடை அமைப்பதற்காக நடைபெற்ற பூமி பூஜை விழா நிகழ்வில் விசிக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வாஞ்சிநாதன் திமுக பேரூர் அவைத் தலைவர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.