வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே அறிஞர் அண்ணா வாகன ஓட்டுன நிறுத்தம் உள்ளது. இங்கு மினி லாரி, டெம்போ, சிறிய சரக்கு வாகனம், சுற்றுலா வாகனம், கார், ஆட்டோ போன்ற அனைத்து வாகனங்களும் வாடகைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். இந்த வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் சார்பில் ஒவ்வொரு மாதமும் பணம் வசூல் செய்யப்பட்டு பணத்தை சேர்த்து வைக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் தங்கள் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் நல்ல முறையில் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற எல்லை காளியம்மன் கோவிலில் வேண்டி கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.