திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் வைகுந்து. இவர் மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியில் இருந்த நிலையில் முகாம் ஒன்றில் தற்காலிக கூடாரம் அமைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் அவரது உடல் சொந்த ஊரான திருவிழா கோடு பகுதிக்கு இன்று கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது முன்னதாக ராணுவ மரியாதை உடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்பட்டது