சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு.கோவில்பட்டியைச் சேர்ந்த கவிப்பிரபா (17), சாதனா (8) சகோதரிகள் பால் வாங்க சென்றபோது அரசு பேருந்து மோதிய விபத்தில் சாதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கவிப்பிரபா மதுரை, தஞ்சாவூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பேருந்து ஓட்டுநர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.