தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மானங்காத்தான் கிளை சார்பில் இலவச மருத்துவ முகாம் மானங்காத்தான் சமுதாய நலக் கூடத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பொது மருத்துவம் மற்றும் பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது இதில் கயத்தாறு, மானங்காத்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.