தஞ்சாவூரில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட பின்னர் நிருபர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறுகையில், அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அண்ணாமலையின் அனைத்து திருட்டுத்தனமான, கள்ளத்தனமான செயல்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என விமர்சனம் செய்தார்.