கொடைக்கானல்-பழனி சாலை அருகே உள்ள வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட கடமன்ரேவு, கோம்பைக்காடு, சவரிக்காடு ஆகிய பழங்குடியின கிராமங்களில் உள்ள மக்களுக்கு குடிமைப் பொருள் மற்றும் வட்ட வழங்கல் வட்டாட்சியர் சரவணவாசன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் களஆய்வு செய்து 12 குடும்ப அட்டைகளை வீடு தேடி, நேரடியாக பயனாளிகளிடம் வழங்கினர்.