தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மூன்றாவது ஆண்டு தொடக்க விழா 21 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது மூணாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தென்காசி நகராட்சி பகுதியில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை உணவகத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து ஹோட்டல் உரிமையாளர்கள் அசத்தினர்