கயத்தாரில் உள்ள காந்தாரி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் கயத்தாறு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு பேரூராட்சி சேர்மன் சுப்புலட்சுமி ராஜதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் முகாமில் டாக்டர் பால் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர் முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது