மாடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாடப்பள்ளி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தில் சில வருடங்களுக்கு முன்புதான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பழுது நீக்கு பணியும் நடைபெற்றுள்ளது ஆனால் தற்போது பள்ளி கட்டிடத்தின் மேல் சிமெண்ட் பூச்சி பெயர்ந்து கீழே விழுந்து உள்ளது. இதனை அப்பகுதி சார்ந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளனர் அதன் வீடியோ தற்போது மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது