ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம், அனவர்த்திகான்பேட்டையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் மற்றும் பனப்பாக்கம் அருகே கட்டப்பட்ட மேம்பாலம் என 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று மேம்பாலங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மேம்பாலங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர்