பரமக்குடி அருகே கொல்லனூரில் அமைந்துள்ள வாழவந்த முத்துமாரியம்மன் கோயில் 19 ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் தொடங்கி தினமும் இரவு பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கும்மியாட்டம் ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் என சிறப்பாக நடைபெற்றது இறுதி நாளான இன்று வானவேடிக்கைகள் முழங்க பெண்கள் கும்மி அடித்தும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் பெண்கள் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரியை கரைத்தனர்